News
ஒரு மணி நேரத்திற்கு 5 மெட்ரிக் தொன் உப்பை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இலங்கை அரசால் இன்று திறக்கப்படுகிறது

ஆனையிறவு உப்பு தொழிற்சாலை இன்று (29) திறக்கப்படவுள்ளது.
தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர் கயான் வெல்லால கூறுகையில், இந்த தொழிற்சாலை ஒரு மணி நேரத்திற்கு 5 மெட்ரிக் தொன் உப்பை உற்பத்தி செய்கிறது என்றார்.
வட மாகாணத்தில் மூடப்பட்டிருந்த பல தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
புதிய தொழிற்பேட்டை ஒன்றை வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனை ஆராய்வதற்காக அமைச்சர் சுனில் ஹதுன்நெத்தி உள்ளிட்ட குழுவினர் சமீபத்தில் வட மாகாணத்தில் சுற்றுப்பயணம் ஒன்றில் ஈடுபட்டனர்.
அதன்படி, நவீன உபகரணங்கள் மற்றும் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட ஆணையிரவு உப்புத் தொழிற்சாலை முதலாவதாக திறக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

