உனக்கு எப்போது திருமணம் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டிருந்த நபரை அ*டித்துக் கொ*ன்றவர் கைது.
எப்போது திருமணம் என்று அடிக்கடிக் கேட்டுக்கொண்டிருந்த முதியவரை அடித்துக் கொன்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.
இந்தோனேசியா, வடக்கு சுமத்திரா பகுதியில் அசிம் இரியான்டோ என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரியொருவர் வசித்து வந்தார். இவரது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 45 வயது சிரேகர் மீது அதிக அக்கறைக் கொண்ட இவர் சிரேகரைப் பார்க்கும் போதெல்லாம் ”எப்போது திருமணம்?” என்று கேட்டு வந்துள்ளார்.
இந்தக் கேள்வியால் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29 ஆம் திகதி முதியவரின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று மரக்கட்டையால் குறித்த முதியவரைத் தாக்கியுள்ளார்.
குறித்த முதியவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
முதியவர் உயிரிழந்ததையடுத்து பொலிஸார் விசாரணையை மேற்கொண்ட போது திருமணம் குறித்து அவர் கேட்டுக்கொண்டே இருந்ததது மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டதால் அவரை தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.