News

இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 44% வரி விதித்து அதிர்ச்சி கொடுத்தது அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இலங்கைப் பொருட்களுக்கு 44% வரி விதிப்பதற்னகான நிர்வாக உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று (02) அறிவித்துள்ள நிலையில், இந்த வரி நாளை மறுநாள் (05) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.      

அமெரிக்காவால் உலகில் அதிக வரி விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கை இடம்பிடித்துள்ளது

அமெரிக்காவின் (USA) வர்த்தக ஏற்றத்தாழ்வைக் கட்டுப்படுத்துவதும், அமெரிக்கத் தொழில்களை ஊக்குவிப்பதுமே இந்தப் புதிய வரிகளை விதிப்பதன் நோக்கம் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளார்.


அதன்படி உலகெங்கிலும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதுடன் அந்நாடுகள் கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்கும் நிலையில் உள்ளன.

இந்நிலையில், இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி இடமாக அமெரிக்கா தொடர்ந்தும் உள்ளது. மொத்த வணிக ஏற்றுமதியில் 23% பங்களிக்கிறது.

2023 ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு மொத்த ஏற்றுமதி மதிப்பு 2,758.57 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், அதே காலகட்டத்தில் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு மொத்த இறக்குமதி 507.40 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்தது

இதுவரை, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 12.2 சதவீத வரியை விதித்துள்ள நிலையில், இந்த புதிய வரி விதிப்பு நாட்டின் ஏற்றுமதித் துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Here’s a more detailed breakdown:

Apparel and Textiles: A significant portion of Sri Lanka’s exports to the US are in the form of apparel, including garments, underwear, and sportswear.


Rubber and Rubber Products: Pneumatic tires, rubber tubes, and other rubber products are also major exports.


Gems and Jewelry: Sri Lanka is known for its gems and jewelry, which are a significant export to the US.


Tea: Ceylon tea is a well-known export to the US.
Coconut and Coconut Products: Coconut oil, coconut milk, and other coconut-based products are exported to the US.


Electrical and Electronic Products: Sri Lanka is expanding its role in the electronics industry, exporting various electrical and electronic products.


Other Notable Exports: Spices, essential oils, and oleoresins are also exported to the US.


Trade Value: In 2024, U.S. goods imports from Sri Lanka totaled $3.0 billion.


Trade Deficit: The U.S. goods trade deficit with Sri Lanka was $2.6 billion in 2024

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button