ICC யின் ஜுலை மாத WOMEN PLAYER OF THE MONTH ஆக இலங்கை கிரிக்கட் வீராங்கனை சமரி அத்தபத்து தெரிவானார்
ICC யின் ஜுலை மாத WOMEN PLAYER OF THE MONTH ஆக இலங்கை கிரிக்கட் வீராங்கனை சமரி அத்தபத்து தெரிவானார்
இந்திய மகளிர் அணியின் ஸ்மிருதி மந்தனா மற்றும் செஃபாலி வர்மா ஆகியோரும் இந்த விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு இருந்த நிலையில் ICC WOMEN PLAYER OF THE MONTH ஆக இலங்கை கிரிக்கட் வீராங்கனை சமரி அத்தபத்து தெரிவானார்
இலங்கை மகளிர் அணித்தலைவியான சமரி அத்தபத்து கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மகளிருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
குறித்த தொடரில் மலேசிய மகளிர் அணிக்கு எதிரான போட்டியொன்றின்போது சதம் விளாசி ஆசியக் கிண்ண மகளிர் இருபதுக்கு 20 தொடரில் சதம் பெற்ற முதல் வீராங்கனை என்ற சாதனையைத் தன்வசப்படுத்தினார்.
அத்துடன் 7 முறை ஆசியக் கிண்ணத்தை வென்றுள்ள இந்திய மகளிர் அணியை வீழ்த்தி மகளிருக்கான ஆசியக் கிண்ணத்தை இலங்கைக்கு வென்றுகொடுத்துள்ளார்.
சமரி அத்தபத்து ஐசிசியின் சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை முன்னதாக 2 முறை வென்றுள்ளார்.
ளார்.