News
தகாத முறையிலான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பாக பொலிஸார் விசாரணை
அதுருகிரிய பச்சை குத்தும் மையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்த என்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் சடலத்தின் நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சுமார் 30 பேரிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலத்தின் பிரேத பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டபோது, மருத்துவ மாணவர்களும் இணைந்திருந்தனர். அவர்களின் ஊடாக குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொலைச் சம்பவம் தொடர்பான காணொளி காட்சிகளை வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் இருந்தும் குறிப்புகள் மற்றும் உண்மைகளை எடுத்துக் கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.