சஜித்தை எமது பிரதான அரசியல் எதிரியாக பார்க்கவும் ; நாமல்
SLPP யின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, SLPP பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன் நடத்திய சந்திப்பில், தமது கட்சியின் கவனம் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை உறுதிசெய்து, SJB தலைவர் சஜித் பிரேமதாசவை தமது பிரதான எதிரியாக முன்னிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
கட்சி உறுப்பினர்களுக்கு அவர் ஆற்றிய உரையில்,
கட்சியை விட்டு வெளியேறியவர்களை விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நாமல் ராஜபக்ச அழைப்பு விடுத்தார், ஐக்கிய தேசியக் கட்சி முன்னர் இந்த நபர்களை பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் விமர்சித்ததை எடுத்துரைத்த அவர் ஒரு கட்டத்தில் ஐ.தே.க.வை விமர்சித்த எம்.பி.க்கள்தான் தற்போது ஐ.தே.க தலைவரின் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், கட்சியின் முடிவுக்கு எதிராகச் சென்ற ஸ்ரீ.ல.பொ.க எம்.பி.க்களை முன்னிலைப்படுத்த நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார்.