News
கம்பஹாவில் களமிறங்கிய காத்தான்குடி ஆளுமை – கலக்கத்தில் எதிர்க்கட்சிகள்

கம்பஹா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சார பணியில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்.!
(எஸ். சினீஸ் கான்)
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல பிரதேச சபையில் ஐக்கிய தேசிய கூட்டணியின் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் சந்திப்பும், தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழாவும் கஹடோவிட பிரதேசத்தில் நேற்று (09) நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார்.
இதன்போது, ஜக்கிய தேசிய கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

