அமெரிக்கா மின்சார கார்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல இலத்திரனியல் பொருட்ளை உற்பத்தி செய்ய அத்தியவசிய தேவையான 7 அரிய வகை கனிமங்களை இனிமேல் அமெரிக்கவுக்கு ஏற்றுமதி செய்ய மாட்டோம் என சீனா அறிவிப்பு

சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் அரியவகை கனிமங்கள் மற்றும் தனிமங்களை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.
சீனாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனா அதிபர் ஜி ஜின்பிங் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு 50 கனிமங்களை முக்கியமானதாக வகைப்படுத்துகிறது.
அதாவது அரியவகை கனிமங்கள் என்று வகைப்படுத்துகிறது. கோபால்ட், லித்தியம், மாங்கனீசு மற்றும் நிக்கல் ஆகியவை ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் செம்பு சோலார் பேனல்கள் மற்றும் மின் இணைப்புகளிலும் இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது, PV பேனல்களில் சிலிக்கான் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரிகளில் கிராஃபைட் பயன்படுத்தப்படுகிறது.
ஆர்சனிக், காலியம் மற்றும் டெல்லூரியம் ஆகியவை சூரிய மின்கலங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
உலகளவில் இந்த முக்கியமான கனிமங்களின் உற்பத்தியில் 60% சீனா கட்டுப்படுத்துகிறது.
அதேபோல் உலகளாவிய அளவில் இந்த கனிமங்களை பயன்படுத்தும் செயலாக்கத் திறனில் 85%ஐ சீனா கட்டுப்படுத்துகிறது.
மீதமுள்ள திறன் காங்கோ ஜனநாயகக் குடியரசு (DR காங்கோ) மற்றும் இந்தோனேசியா போன்ற அதிக சீன முதலீட்டைக் கொண்ட நாடுகளில் அமைந்துள்ளது. இந்த சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் அரியவகை கனிமங்கள் மற்றும் தனிமங்களை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது.
இந்த நிலையில்தான் சீனாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் அரியவகை கனிமங்கள் மற்றும் தனிமங்களை நிறுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது

