News
பிரதமர் ஹரிணியின் பாதுகாப்பு பிரிவினர் ஆலய சூழலுக்குள் காலணியுடன் சென்றதால் பிரதமர் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.

பிரதமர் இந்து மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
மாவிட்டப்புரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பிரதமர் ஹரினி அமரசூரியவின் பாதுகாப்பு பிரிவினர் ஆலய சூழலில் காலணிகளுடன் சென்ற விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை தெரிவித்தார்

