News
பங்களாதேஷில் நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் அப்படி ஒரு கலவரமே நடந்திருக்காது; ஜனாதிபதி ரணில் அறிவிப்பு
பங்களாதேஷில் நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் அப்படி ஒரு கலவரமே நடந்திருக்காது.’ என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஊடகங்களின் பிரதிநிதிகளை சற்று முன்னர் சந்தித்த ஜனாதிபதி ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
பங்களாதேஷில் கலவரம் இடம்பெறுகிறதே , நீங்கள் அங்கு இருந்திருந்தால் எப்படியான நடவடிக்கை எடுத்திருப்பீர்கள் ? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி , தான் அங்கு ஜனாதிபதியாக இருந்திருந்தால் அப்படியொரு கலவரமே வந்திருக்காது’ என்றார்.