News

பிரபல பெண்கள் பாடசாலையில் பிள்ளையானின் சகாவினது சேட்டைகள்…! மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி.



பல மாணவிகளுடன் சேட்டை விட்டுள்ளார். துணிந்த ஒர் மனைவியே வெளிகொனர்ந்துள்ளார். பெற்றோர்கள் இவ் விடயத்தில் மிகுந்த அவதானமாக செயல்பட வேண்டும். பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பிள்ளைகளை பாதுகாக்கவேண்டிய நிர்வாகமும் உடந்தை.

இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான் ) கட்சி ஒருங்கிணைப்பாளரான ஆசிரியர் ஒருவர் பிரபல பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இவரை கைது செய்து செய்யுமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ள நிலையிலும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இவ்விடயம் குறித்து கல்வி அமைச்சரின் நிலைப்பாடு என்னவென இன்றைய தினம் பாராளுமன்றத்தில் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்தவிடம் நேரில் கேள்வி எழுப்பினேன்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு கேள்வி எழுப்பினேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான பாடசாலையில் கல்வி பயிலும் மாணவிக்கு அந்த பாடசாலையின் ஆசிரியரான கோபிநாத் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த மாணவி ஜனாதிபதிக்கு இவ்விடயத்தை அறிவித்துள்ளார்.இந்த நபரை உடனடியாக கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இருப்பினும் இந்த ஆசிரியரை பொலிஸார் இன்றுவரை கைது செய்யவில்லை.தனது சட்டத்தரணி ஊடாக அவர் நீதிமன்றில் முன்னிலையாகுவார் என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர். பொலிஸாரின் கடமை இதுவல்ல,கோபிநாத் என்ற இந்த ஆசிரியர் தான் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் கட்சி ஒருங்கிணைப்பாளர் என்று பகிரங்கமாக கூறுகின்றார்.

இந்த மாணவியிடம் ‘நான் குறிப்பிடுவதை போல் இருக்காவிடின் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்’ என்று இந்த ஆசிரியர் மிரட்டியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட்டும் பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்படவில்லை.இது தேசிய பாடசாலை. ஆகவே இந்த பிரச்சினைக்கு கல்வி அமைச்சரின் பதிலை எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த , சபாநாயகரே குறித்த பாராளுமன்ற உறுப்பினரிடம் நான் தகவல்களை கேட்டுள்ளேன்.கல்வி அமைச்சு ஊடாக தலையிட்டு,உடனடியாக சட்டத்தை செயற்படுத்துமாறு குறித்த சிரேஷ்ட பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்துகிறேன் என்றார்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button