News
கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் பதவியை எனக்கே வழங்க இருந்தார்..
கடந்த அரகல போராட்டத்தின் போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னை பிரதமர் பதவியை ஏற்குமாறு கோரிக்கை விடுத்ததாக, ராஜினாமா செய்த நீதி அமைச்சரும் ஜனாதிபதி வேட்பாளருமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆனால் அங்கு பொஹொட்டுவ அந்த வாய்ப்பை தனக்கு வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
இந்த நாட்டில் போராட்டம் நடந்தபோது, இந்த நாட்டை அமைதிப்படுத்தி, இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக, 2022 மே 12 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம் எடுத்து, அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்குமாறு எனக்கு அறிவித்தார்.
அதையறிந்து மொட்டு கட்சி கவலையடைந்து ரணில் விக்கிரமசிங்கவை விரைவாக அழைத்து வந்து அழுத்தம் கொடுத்தனர் என அவர் குறிப்பிட்டார்.