இந்த ஜனாதிபதி தேர்தலைத் தடுக்க ரணில், ராஜபக்ஷாக்கள் அமைத்த பாதுகாப்பு வளையங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்து செப்டெம்பர் 21 ஆந் திகதி பொதுமக்களின் உண்மையான ஆட்சியை அமைக்கப் போகிறோம் ; NPP
யார் யாருக்கோ அரசாங்கங்களை அமைத்தது போதும். இப்போது பொதுமக்களுக்கான அரசாங்கத்தை அமைத்திடவேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
76 வருடகாலமாக துன்பங்களை அனுபவித்து நாடு எதிர்பார்க்கின்ற வெற்றியை பெற்றுக்கொள்வதற்காக நாமனைவரும் எதிர்காலத்தில் வெற்றிகரமாக உழைப்போமென முதலில் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஜனாதிபதி தேர்தலைத் தடுக்க ரணில், ராஜபக்ஷாக்கள் அமைத்த பாதுகாப்பு வளையங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்து செப்டெம்பர் 21 ஆந் திகதி பொதுமக்களின் உண்மையான ஆட்சியை அமைக்கப்போகிறோம். இதுவரை யார்யாருக்கோ அரசாங்கங்களை அமைத்துக்கொடுத்தது போதும். இப்போது பொதுமக்களுக்காக அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த வெற்றிக்குப் பின்னர் மக்கள் பங்கேற்புடனான அபிவிருத்திக்கான பிள்ளையார் சுழி போடப்படுகின்றது. இந்த நாட்டை நாசமாக்கிய கட்சிகளைப்போன்றே தலைவர்களும் துண்டுதுண்டாகப் பிரிந்து கதிகலங்கிப் போயிருக்கிறார்கள்.
சஜித்தின் கட்சியின் தவிசாளர் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் கொஞ்சநஞ்சமல்ல. அதைப்போலவே ரணில் விக்கிரமசிங்கவும் பொன்சேகா முன்வைத்த குற்றச்சாட்டுகள் பற்றி மாத்திரமே கேள்விக்குட்படுத்துகிறார். எங்கள் தலைவருக்கு வாயும் வயிறும் மாத்திரமே இருக்கின்றது; நாட்டை ஆள முடியாது என ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். அதேவேளையில் நாடு முழுவதிலும் மகா சங்கத்தினரை முதன்மையாகக்கொண்ட பெண்கள், இளைஞர் போன்றே தொழில்வாண்மையாளர்களையும் ஒழுங்கமைத்து மக்களைச் சந்தித்து அரசியல் புரிந்துணர்வினை பெற்றுக்கொடுத்து தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறது. ஆசிரியர் மாநாடு, தாதியர் மாநாடு போன்றே இளைப்பாறிய முப்படையினர் கூட்டமைவின் மாநாடு என்பவற்றை வெற்றிகரமாக நடத்தியமை தொடர்பில் எதிரிகள் பதற்றமடைந்துள்ளார்கள். தாதியர் மாநாட்டுக்காக சீருடையில் வருகைதந்தமை பற்றி எதிரி பலவிதமான பிரச்சாரங்களை அனுப்பிக்கொண்டிருந்தாலும் தேர்தல்கள் ஆணைக்குழு தொழில்சார் மாநாடுகளுக்கு சீருடையில் வருகைதருகின்றமை சட்டவிரோதமானதல்ல எனக் கூறியது. அவர்கள் சீருடையில் வந்திராவிட்டால் அவர்கள் தாதியரே அல்லவென எதிரிகள் கூறுவார்கள். சமன் ரத்தப்பிரியவின் தொழிற்சங்கம் முடிந்துவிட்டது.
வெளிநாடு சென்றுள்ள இலங்கையர் இன்றளவில் தேர்தலில் முனைப்பாக பங்களிப்பதற்காக மீண்டும் வந்துகொண்டிருக்கிறார்கள். 2019 இல் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு வாக்களித்த எண்ணிக்கையைவிட அதிகமான எண்ணிக்கையுடையோர் வருவது நம்பிக்கையாகும். இங்கே வருகைதந்துள்ளவர்களைவிட அதிகமானோர் வெளியில் இருந்துகொண்டு இந்த தருணத்திலும் திசைகாட்டியை வெற்றிபெறச் செய்விப்பதற்காக செயலாற்றி வருகிறார்கள். இந்த தடவை கிடைப்பது இலங்கையின் வரலாற்றினை தலைகீழாக மாற்றுகின்ற மகத்தான வெற்றியாகும். கோல்ஃபேஸ் போராட்டம் நடத்தப்பட்டது ரணிலை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்காக அல்ல. போராட்டத்திற்குச் சென்ற இலட்சக்கணக்கான மக்கள் ஆழமான கட்டமைப்பு சார்ந்த மாற்றமொன்றை செய்வதற்காக அதாவது சிஸ்டம் சேன்ஞ் ஒன்றை செய்ய பொருத்தமான ஒரே இயக்கமாக தேசிய மக்கள் சக்தியயை தெரிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை ஆட்சியாளர்கள் தாய் நாட்டுக்கு தோல்விகண்ட பெறுபேறுகளை பெற்றுக்கொடுத்து கவலைக்கிடமான நிலைமைக்கு மாற்றியிருக்கிறார்கள். கவலைக்கிடமான நிலையில் இருக்கின்ற தாயகத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு தேசிய மக்கள் சக்தியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்றளவில் மக்கள் பிரதிநிதிகள் சார்பில் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதாகக்கூறுகின்ற, உன்னதமானதென கூறுகின்ற பாராளுமன்றம் பாடசாலை மாணவர்களால் அமர்ந்திருந்து கேட்டுக்கொண்டிருக்க முடியாத தகாத வார்த்தைகள் பிரயோகிக்கப்படுகின்ற இடமாக மாறியுள்ளது. நான் பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் இருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் 196 போ் சாதாரண தரத்தில் சித்தியடையாதவர்களாவர்.
தோழர் அநுர ஜனாதிபதியாகினால் மாத்திரம் போதாது. மக்களுக்கு இல்லாத சிறப்புரிமைகளை அரசியல்வாதிகளுக்கும் இல்லாதொழிப்பதற்கான பிரேரணை முதலாவது அமைச்சரவைக்கே சமர்ப்பிக்கப்படும். இந்த வேலையை சஜித்தால் செய்ய முடியாது. வேறு எவரும் செய்யவும் மாட்டார்கள். அவர்கள் சுகம் அனுபவிப்பதற்காக அமைத்துக்கொண்டுள்ள அத்தனை சட்டங்களையும் இல்லாதொழிப்போம். இவை மூலமாக இளைப்பாறிய ஜனாதிபதிமார்களுக்கு மாத்திரம் செலவிடப்படுகின்ற தொகையான 1100 இலட்ச ரூபாய்களை சேமித்துக்கொள்ளலாம். இந்த நாட்டில் நிலவும் அசிங்கமான அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைத்து நாட்டை கட்டியெழுப்புவதை ஆரம்பிப்போம்.
உலகில் ஒரு சில நாடுகள் விருத்தியடைந்த விதத்தைப் பார்க்கும்போது எங்களுக்கு வியப்பாக இருக்கிறது. எமது நாட்டில் இருக்கின்ற அளவிற்கு வளங்கள் கிடையாது. ஜப்பானில் எரிமலைகள் காணப்படுகின்றன. நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. சுனாமி பேரலை வருகின்றது. இரண்டாவது உலக மகா யுத்தத்தில் முற்றாகவே நாசமடைந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் பாலைவனங்கள் முன்னேற்றமடைந்த நாடுகளாக மாற்றப்பட்டுள்ளன. எனினும் எமது நாட்டிலே இவ்வளவு வளங்கள் இருந்தும் ஏன் விருத்தி செய்துகொள்ள முடியவில்லை? எமது நாட்டு மக்களின் வாக்குகளைக் கொண்டு கள்வர்கள் ஆட்சிக்கு வந்து மன்னர்களாகினர். பொருத்தமற்றவர்கள் மக்கள் பிரநிதிகளாக நியமிக்கப்பட்டார்கள். எனினும் கவலைப்படவேண்டாம். உண்மைக்கு மதிப்பளித்து உங்களிடமிருந்த முன்னேற்றகரமான நோக்கங்களுக்காக செயலாற்றுவதற்கான வாய்ப்பு 21 ஆம் திகதி பிறந்துள்ளது. உங்களிடம் நாட்டை முன்னேற்றுவதற்கான நோக்கம், இனவாதம், மதவாதம் இல்லாத நாட்டை உருவாக்குவதற்கான நோக்கம், திருட்டுக்கள் மோசடிகள் ஊழல்களை தடுப்பதற்கான நோக்கமே இருந்தது. எனினும் ஆட்சியாளர்களிடம் அதற்கு எதிர்மாறான நோக்கங்களே இருந்தன. எனினும் ஆட்சியாளர்கள் சுபீட்சத்தின் நோக்கம், வளமான எதிர்காலம், ஆசியாவின் ஆச்சரியம் போன்ற தொனிப்பொருள் வாசகங்களை முன்வைத்து உங்களை ஏமாற்றினார்கள். அது மாத்திரமல்ல தார்மீக சமுதாயமொன்றை உருவாக்குவதாகக்கூறி போதைப்பொருள் பெருந்தொற்றுக்கு நாட்டை பலிகடாவாக்கி குற்றச்செயல் நிறைந்த இராச்சியமொன்றை உருவாக்கினார்கள். எனினும் 2024 இல் உங்களுடைய நோக்கமும் தேசிய மக்கள் சக்தியின் நோக்கமும் இணையானதாக அமைந்து புதிய ஆட்சியொன்று உருவாக்கப்படும்.
எமது நாட்டில் ஆரம்ப கைத்தொழில்கள் மக்களின் இடையீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஆரம்ப கைத்தொழில்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை பெற்றுக்கொடுத்து முன்னேற்றுவதையே விருத்தியடைந்த நாடுகள் செய்தன. எனினும் எமது நாட்டின் அரசாங்கங்கள் இருந்த கைத்தொழில்களையும் சீர்குலைக்கின்ற மட்டத்திற்கு எல்லாவற்றையும் இறக்குமதி செய்தன. புதியவற்றை உற்பத்தி செய்யாவிட்டால் அந்த நாடு விருத்தியடைய மாட்டாது. பட்டங்கள், வெசாக் கூடுகள் கூட வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுமளவுக்கு எமது நாடு வீழ்த்தப்பட்டது. இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கவேண்டுமானால் பாரிய மறுமலர்ச்சி யுகமொன்று உருவாக்கப்படவேண்டும். கைத்தொழில் மற்றும் விவசாயத்துறையின் அபிவிருத்திக்காக விசேட அபிவிருத்தி வங்கியொன்றை தாபிப்பதற்கான திட்டம் ஏற்கெனவே இருக்கிறது. அதைப்போலவே கைத்தொழில்களை ஆரம்பிக்க அவசியமான வேறு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கி இந்நாட்டுக்குள்ளே அல்லது உலக சந்தையில் கேள்வி பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். எமது நாட்டில் 45 இலட்சம் பாடசாலை சிறார்கள் இருக்கிறார்கள். ஒரு வருடத்திற்கு எத்தனை சோடி சப்பாத்துக்கள் தேவை? எத்தனை உபகரணப் பெட்டிகள் தேவை, எத்தனை புத்தகங்கள் தேவை, இவற்றை இலங்கையில் உற்பத்தி செய்ய முடியாதா? பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சுங்க தீர்வையற்ற வரிச்சலுகையை நிறுத்துவதன் மூலமாகவே இவை எல்லாவற்றுக்கும் பிள்ளையார் சுழி போடப்படும். எனினும் கைத்தொழில் துறைக்கு மெஷின் ஒன்று தேவையானால் வரிச்சலுகைகளை வழங்கி அவசியமான ஏனைய வசதிகளை வழங்குவோம். அதைப்போலவே கைத்தொழில்களை உள்ளிட்ட உற்பத்திகளுக்கான வினைத்திறன் மிக்க அரச சேவையொன்றின் வசதிகளை வழங்குவோம். இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய மரக்கறிகள் மற்றும் பழவகைகளில் எவ்வளவு தொகையினை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறோம்? எமது நாட்டில் விவசாயத்திற்கு தொழில்நுட்பத்தையும் நவீனத்துவத்தினையும் அறிமுகம் செய்து மறுமலர்ச்சி யுகமொன்றை உருவாக்குவோம்.
இதற்கான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கையை வெளியிட்டோம். எமது நாட்டில் இருக்கின்ற அதைபோலவே வெளிநாடுகளில் உள்ள இலங்கை விஞ்ஞானிகளும் சிறப்பறிஞர்களும் இந்தக் கொள்கையை தயாரித்தல் மற்றும் அமுலாக்குதல் தொடர்பில் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி வருகிறார்கள். சிறிய விளைநிலங்களில் அலுவல்களுக்காக உலகத்தில் மிகவும் சிறிய இரண்டு சக்கர உழவு இயந்திரத்தை பேராதனை பல்கலைக்கழகத்தின் திரு.ரே. விஜேவர்தனவே கண்டு பிடித்தார். அவருடைய உற்பத்தி தொடர்பில் அப்போது இருந்த பிரதம அமைச்சருக்கு கமத்தொழில் அமைச்சர் அறிமுகம் செய்தாலும் எந்த விதமான பயனும் விளையவில்லை. அதைபோலவே இந்த நாட்டில் முரண்பாடுகள் அற்ற தேசிய ஒற்றுமையையும் மதம் சார் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப வேண்டும். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு பௌதீக அபிவிருத்தியைப் போன்றே ஆன்மீக அபிவிருத்தியும் அவசியமாகும். வீதிகள், கட்டிடங்கள், நீர்தேக்கங்கள், கால்வாய்கள், மின்சாரம் வழங்குதல், தொலைத்தொடர்புகள் போன்றவை பௌதீக அபிவிருத்திக்கு அவசியமாகின்றன. ஜனநாயகம், தேசிய ஒற்றுமை, மதம்சார் நல்லிணக்கம், கருணை, பரிவிரக்கம் போன்றே மனிதமும் ஏற்புடையதாகும். இவற்றை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமா? இந்தப் பண்புகளை ஆட்சியாளர் மனதில் கொள்ளல் வேண்டும். ஆன்மீக ரீதியாக கட்டியெழுப்புவதற்கான அடிப்படை அத்திவாரம் கல்வியினூடாகவே இடப்படுகிறது. விடயஅறிவு மாத்திரமன்றி கலை, இலக்கியம், வெகுசன ஊடகம் பயன்படுத்தப்படல் வேண்டும். தேசிய மக்கள் சக்தி இதோ இந்த இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள் ஊடாகவே நாட்டை கட்டியெழுப்புவதற்காக அதிகாரத்தை வேண்டி நிற்கிறது. எனினும் சஜித்திடமிருந்தோ ரணிலிடமிருந்தோ தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்பீர்களேயானால் எமது தாய் நாட்டை மோச்சரியாக மாற்ற வேண்டி வருமென்பதை மனதிற்கொள்ள வேண்டும். அவர்கள் அரிசி, பணம், போத்தல்களை கூட பங்கிட்டு வருகிறார்கள். நாங்கள் எங்களுடைய அறிவினை பகிர்ந்து மக்களை விழிப்புணர்வூட்டி வருகிறோம். அவர்களிடம் ஊடகப்பலம் இருக்கிறது. எனினும் நாங்கள் எங்களுடைய வாய்ப்பலத்தை பயன்படுத்திக் கொண்டு நாடுபூராவும் சென்று வருகிறோம். நீங்களும் உங்களுடைய வாயை பயன்படுத்தி மென்மேலும் மக்கள் பலத்தை கட்டியெழுப்ப ஒன்றுசேருங்கள். இலங்கையில் எங்கேயாவது ஒரு இடத்திலிருந்து 10 வாக்குகளையேனும் பெற்றக்கொடுக்கின்ற இலக்கிற்காக ஒவ்வொருவரும் ஒன்றுசேருங்கள். இவை அனைத்தின் மூலமாகவும் தெளிவாகின்ற விடயம் ஏனைய எந்தவொரு பலத்தையும் விட மக்களின் பலம் சக்திவாய்ந்தது என்பதாகும். அந்த மக்கள் பலத்தை பிரயோகித்து புதிய மறுமலர்ச்சி யுகமொன்றை ஆரம்பிக்க தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் தோழர் அநுர குமார திசாநாயக்கவை அமோக வெற்றியீட்ட செய்விப்போம்