News
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் அணி..
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்துள்ள பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் அணி அடுத்த வாரத்திற்குள் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் தற்போது தயார் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
முன்னாள் உள்ளுராட்சி சபை தலைவர்களின் விசேட கூட்டத்தில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.