News

ராஜபக்ஷ குடும்பத்துக்குள் குழப்பமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக பொய்யான பிரசாரங்கள் செய்யப்படுகின்றன – நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் ; நாமல்

ஆர்.ராம்

ராஜபக்ஷ குடும்பத்துக்குள் குழப்பமான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக பொய்யான பிரசாரங்கள் செய்யப்படுவதாக தெரிவித்துள்ள பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ பிரசாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதும் ராஜபக்ஷக்களின் ஒற்றுமை நிரூபணமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டதை அடுத்து ராஜபக்ஷக்களின் குடும்பத்துக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக வெளியாகிவரும் தகவல்கள் தொடர்பில் நாமல் ராஜபக்ஷவிடத்தில் நேரடியாக வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி வேட்பாளராக நான்  நிறுத்தப்பட்டமைக்கு கட்சியின் தீர்மானம் தான் காரணமாகும். கட்சி தேசத்தின் எதிர்காலத்தினை மையப்படுத்தியே தீர்மாத்தை எடுத்தது. அந்த வகையில் தேசத்தின் எதிர்காலம் சம்பந்தமாக எனக்கும் பொறுப்புள்ளது. அந்த பொறுப்பின் அடிப்படையில் தான் நான் பொறுப்பேற்றுள்ளேன்.

இத்தருணத்தில் எமது குடும்பத்துக்குள் பிரச்சினைகள் என்று பிரசாரம் செய்கின்றார்கள். அவற்றை நிராகரிக்கின்றேன். அதுமட்டுமன்றி அரசியல் ரீதியாக பலவீனம் அடைந்துள்ளவர்களின் செயற்பாடாகவே பார்க்கின்றேன்.

எதிர்வரும் நாட்களில் தேர்தல் பிரசாரப் பணிகள் ஆரம்பமாகவுள்ளன. அதன்போது ராஜபக்ஷகளின் ஒற்றுமை மேடைகளின் ஊடாக வெளிப்படுத்தப்படும். எதிர்க்கட்சியினரின் பொய்யான பிரசாரம் அப்போது அம்பலமாகும் என்றார்.

Recent Articles

One Comment

  1. சனாதிபதி வேட்பாளராக நாமல் வீடு வீடாக வருமாறு இந்த நாட்டு மக்கள் குறிப்பாக தாய்மார்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் எவ்வாறு நாட்டின் பொதுச் சொத்துக்களயைும் அரச உடைமைகளையும் எவ்வாறு களவாடி வௌிநாடுகளில் பதுக்கிவைத்து கள்ளப்பூனை போல் பல்லை இழித்துக்கொண்டு இருப்பது இந்த நாட்டின் எல்லாத் தாய்மார்களும் நன்கு தெரிநதுவைத்திருக்கின்றார்கள். ஏற்கனவே தயார் படுத்தி வைத்திருக்கும் விளக்குமார்களும் தும்புத்தடிகளும், மிக அண்மையில் தயார் செய்த ‘வரவேற்பு சாதனங்களையும்’ வைத்துக் கொண்டு தாய்மார்க்ள பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் எனவே நாட்டிலுள்ள ஒவ்வொரு ஊர்கள். கிராமங்களுக்கும் வருகை தருமாறு வருக வருக என நாமலையும் அவருடைய அடிவருடிகளையும் வரவேற்கின்றார்கள்.

Leave a Reply to voice of justice and good governance Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker