News
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்து, அரசாங்கத்தில் இணைந்து கொள்ள முடிவு பண்ணிய ராஜித சேனாரத்ன – நாளை இணைகிறார்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன நாளை (13ஆம் திகதி) காலை அரசாங்கத்தில் இணையவுள்ளார்.
கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையில் நடைபெறவுள்ள வைபவமொன்றில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து எம்.பி. அரசாங்கத்தில் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
ராஜித சேனாரத்ன (11ம் திகதி) களுத்துறை மாவட்டத்தில் தனது செயற்பாட்டாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். அங்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு பொருளாதாரத்தை கட்டியெழுப்பினார் என்பது குறித்த விபரங்களை அவர் கலந்துரையாடினார்