News
மகிந்தவின் பொதுஜன பெரமுன முன்னாள் உறுப்பினர் திலகரத்ன டில்ஷான் இன்று சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரரான திலகரத்ன டில்ஷான் இன்று(14) ஐக்கிய மக்கள் சக்தியோடு இணைந்து கொண்டார்.
ஏறக்குறைய 17 வருடங்கள் இலங்கை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர் சிறிது காலம் அதன் தலைவராகவும் கடமையாற்றினார்.
மேலும் இவர் 2018 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டதுடன் அந்த கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்ட ஒருவர் ஆவார்.