தேசியத்தில் இடம்பிடித்த ஏறாவூர் வீரர்களுடன்
நேபாளத்திலும் வெற்றி வாகை சூட வாழ்த்துகிறோம்.
( ஏறாவூர் நஸீர் -ISD)
கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்டத்தில் குறுகிய நிலப்பரப்புக்குள் உள்ளடங்கிய பிதேசமே ஏறாவூர்.
ஆரம்ப காலத்தில் புகையிலை செய்கை மற்றும் விவசாயத்தில் முன்னிலையில் நின்ற ஏறாவூர் கல்வித்துறையிலும் இதர புறக்கிருத்திய செயற்பாடுகளிலும் குறைபாட்டுடனேயே காணப்பட்டது.
ஆனாலும் காலப்போக்கில் கல்வித்துறையில் மெச்சத்தக்க இடத்தை பிடித்த ஏறாவூர், இன்று விளையாட்டுத்துறையில் தேசியம் கடந்து தன் திறமைகளை கால் பதித்து வருகின்றது.
அந்த வகையில்,
இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணியில் ஏறாவூரை சேர்ந்த MM.முஸ்தாக் மற்றும் MM.முன்சீப் சகோதர்கள் தங்களுக்கான வாய்ப்பை பெற்றதனை போன்று , இலங்கையின் உதைப்பந்தாட்ட இளையோர் அணியிலும் ஏறாவூர் மண்ணின் ஐந்து இளம் வீரர்கள் இடம்பிடித்திருப்பது ஊருக்கும் மாவட்டத்திற்கும் ஏன்? மாகாணத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது.
இவ் ஐந்து வீரர்களுடன் ஏனைய வீரர்களும் ஏறாவூர்
அலிகார் தேசிய பாடசாலை அணியில் ஓரணியாக செயற்பட்டு மிக சிறப்பாக பிரகாசித்து அலிகார் தேசிய பாடசாலையை தேசியத்தில் மகுடம் சூட காரணமானவர்கள் என்றால் மிகையாகாது.
இன்று அதே ஐந்து வீரர்களும் சர்வதேச போட்டி ஒன்றுக்காக தேசிய அணியில் இடம்பிடித்திருப்பதோடு அவ் அணியின் தலைமையும் ஏறாவூர் மண்ணுக்கே கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதுவும் ஏறாவூர் விளையாட்டுத் துறையை புகழின் உச்சத்தில் வைத்திருப்பதற்காக பாரிய அர்பணிப்புடன் செயற்படும் ஏறாவூரின் விளையாட்டுத் துறையில் கலங்கரை விளக்காக திகழும் MM.முகைதீன் (பிரதி அதிபர் -அலிகார்) அவர்களின் மகன் MM.முன்சிப் அவர்களுக்கு தலைமை பொறுப்பு வழங்கியிருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கை இளையோர் அணி தலைமையும் முன்னணி வீரர்களும் ஏறாவூர்தான் என்பது ஏறாவூர் வரலாற்று பக்கத்தில் பொன் எழுத்துக்களாக பொறிக்கப்பட வேண்டிய சாதனைகளே அன்றி வேறில்லை.
அந்தவகையில் சர்வதேச கால்பந்தாட்ட தொடர்களில் ஒன்றான சாப் வெற்றிக் கிண்ணத்திற்கான போட்டி நேபாளத்தில் நடைபெற போகின்றது .
அதற்கான இலங்கை இளையோர் அணியில் இடம்பெற்ற வீரர்களில் ஏறாவூரின் முன்னனி பாடசாலையான அலிகார் தேசிய பாடசாலையின் உதைப்பந்தாட்ட அணியின் இளம் வீரர்களான
MM முன்சிப்,
MDM ஸகீ
IM தில்ஹாம்
SM பாதிக்
AM அத்தீப்
ஆகியோர் தெரிவாகி இருப்பது இதுவே முதல் தடவையாகும்.
போட்டிகள் இம்மாதம் 16 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நேபாளத்தில் நடைபெற இருக்கிறது.
அல்ஹம்துலில்லாஹ் !
சென்று வாருங்கள்! வென்று வாருங்கள்!
அனைத்து நிலையிலும் அல்லாஹ் அருள்புரிவானாக!