News
இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு அமைச்சர் விஜித ஹேரத் – நடிகர் ரவி மோகன் கலந்துரையாடல்

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன், பாடகி கெனீஷா பிரான்சிஸ் மற்றும் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் திரைப்பட சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பின் போது இந்திய திரைப்படங்கள் ஊடாக இலங்கையின் சுற்றுலாத் தளங்களையும், வரலாற்று கதைகளையும் உலகம் முழுவதும் கொண்டு செல்வது குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர் விஜித ஹேரத், பிரபல நடிகர் ரவி மோகன், பாடகி கெனீஷா பிரான்சிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

