News
தொடர் வெற்றிகளை பதிவு செய்து வரும் மடவளை மதீனா தேசிய பாடசாலை அணி, தெபரவெவ மத்திய கல்லூரி அணியை 26 -05 என்ற புள்ளிகள் அடிப்படையில் அசத்தலாக வென்றது.

தெபரவெவ மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக் தொடரின் முக்கியமான போட்டியில், மதீனா தேசிய பாடசாலை அணி, தெபரவெவ மத்திய கல்லூரி அணியை 26-05 என்ற புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி, சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம், மதீனா தேசிய பாடசாலை அணி பிரிவு 1 (Division I) க்கு முன்னேறும் வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தொடரில் மதீனா தேசிய பாடசாலை அணி இதுவரை தோல்வியடையாத அணியாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
லீக் தொடரின் மதீனா அணி பங்குகொள்ளும் கடைசி போட்டி எதிர்வரும் வாரம் திகன மாகாண விளையாட்டு வளாக மைதானத்தில் ராஜகிரிய ஜனாதிபதி கல்லூரிக்கு எதிராக நடைபெற உள்ளது.
-Madina Rugby Media Unit-

