News
இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டை உப்பு உற்பத்தியை மீண்டும் தொடங்கியது Lanka Salt நிறுவனம்.

லங்கா சால்ட் லிமிடெட் நிறுவனம், 18 மாதங்களாக பாதகமான வானிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹம்பாந்தோட்டையில் உப்பு உற்பத்தியை மீண்டும் தொடங்கியுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் டி. நந்தன திலக அறிவித்தார்.
இன்று காலை (ஜூலை 21) புண்டல உப்பளத்தில் உற்பத்தி மீண்டும் ஆரம்பமானது. இதன் மூலம் 40,000 மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு 100,000 மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்ய இலக்கு வைக்கப்பட்டிருந்த போதிலும், பாதகமான வானிலை காரணமாக 40,000 மெட்ரிக் டன் மட்டுமே அறுவடை செய்யப்பட்டது.
மேலும், மஹாலேவய உப்பளத்தில் உப்பு அறுவடை நாளை (ஜூலை 22) தொடங்கப்படவுள்ளதாக தலைவர் நந்தன திலக தெரிவித்தார்.

