News
பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த 39 வயது நபர் நீரில் மூழ்கி காணாமல் போனார்

சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்று மகாவலி ஆற்றில் குதித்த சந்தேக நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரே இதில் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன நபர் சீதுவையைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காணாமல் போன சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

