News
தற்போது ஊழலற்ற அரசாங்கமே ஆட்சியில் உள்ளதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய அரசியல்வாதிகளுக்கு பணம் அல்லது இலஞ்சம் வழங்க தேவையில்லை .

ஊழலற்ற அரசாங்கமே தற்போது உள்ளதாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு இது சிறந்த சந்தரப்பம் என்றும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கை வணிக சபையின் வருடாந்த மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டாளர்கள் தற்போது அரசியல்வாதிகளுக்கு பணம் அல்லது கையூட்டல் செலுத்தாமல் தமது முதலீடுகளை ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, முதலீட்டாளர்களுக்கு உடனடியாக வரிச் சலுகை வழங்க முடியாது என்றும், அதற்கு சிறிது காலம் தேவைப்படுவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதிலிருந்து, இலங்கையில் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமை ஸ்திரமடைந்து வருவதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

