News
பாதாள உலக குற்றவாளி என அறியப்படும் வெலிகம சஹான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான வெலிகம சஹான் என அழைக்கப்படும் சஹான் சிசி கெலும், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட அவர், நேற்று (28) மதியம் விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாணந்துறை மற்றும் களுத்துறை பகுதிகளில் நடந்த இரண்டு துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலும், மட்டக்குளியவில் பத்தே சுரங்க மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலும், வெலிகம சஹான் முக்கிய சந்தேக நபராகக் கருதப்படுகிறார்.
மேலும், அவர் கூலிக்கு கொலை செய்யும் குற்றவாளி எனவும் தெரிவிக்கப்படுகிறது.சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை குற்றப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

