அன்று விற்பனை செய்யப்பட இருந்த ஸ்ரீ லங்கன் ஏர்லைன்சுக்கு இன்று தெற்காசியாவின் சிறந்த விமான சேவைக்கான மதிப்புமிக்க விருதை வென்று சாதனை படைத்தது.

இலங்கை விமான சேவை தெற்காசியாவின் சிறந்த விமான சேவையாக விருது பெற்றது
இந்தியாவின் தில்லியில் அண்மையில் நடைபெற்ற ‘அனைத்துலக சுற்றுலா மாநாடு மற்றும் பயண விருதுகள்’ (International Tourism Conclave and Travel Awards) நிகழ்ச்சியில், இலங்கை விமான சேவை (SriLankan Airlines) தெற்காசியாவின் சிறந்த விமான சேவைக்கான மதிப்புமிக்க விருதை வென்று சாதனை படைத்துள்ளது.
தெற்காசியாவையும் உலகையும் இணைக்கும் வகையில், இலங்கை விமான சேவைக்கே உரித்தான தனித்துவமான விருந்தோம்பல் மற்றும் பயணிகளுக்கு உயர்ந்த தரமான சேவையை வழங்குவதற்காக இந்த விருது கிடைத்துள்ளது.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட நடுவர் குழு இந்த விருது வழங்கும் விழாவில் வெற்றியாளர்களைத் தீர்மானித்தது. இந்த வெற்றி, தெற்காசியாவில் மிகவும் பிரபலமான விமான சேவையாக இலங்கை விமான சேவையின் அங்கீகாரத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
“தெற்காசியாவின் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் மிகவும் வெற்றிகரமாக அமைந்துள்ளன என்பதற்கு இந்த விருது ஒரு சிறந்த சான்றாகும். முக்கிய இடங்களுக்கு விமான சேவைகளை இயக்கி, சிறப்பான சேவையை வழங்குவதன் மூலம் இப்பிராந்தியத்தில் மிகவும் பிரபலமான விமான சேவையாக நாம் உயர்ந்துள்ளோம். இந்த விருது, எமது பயணிகளுக்கு மேலும் உயர்ந்த தரமான சேவையை வழங்குவதற்கு எம்மை மேலும் ஊக்குவிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை,” என இலங்கை விமான சேவையின் வணிகப் பிரிவு தலைவர் திரு. திமுது தென்னகோன் தெரிவித்தார்.



