News
வங்கிக் கணக்குகளில் 1.75 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பணத்தை வைத்திருந்த போதைப்பொருள் வர்த்தகரின் மனைவி ஒருவர் கைது. #இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரரின் மனைவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான வழிகளில் பணம் ஈட்டிய குற்றச்சாட்டில் அவர் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் வங்கிக் கணக்கில் 1.75 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை பணம் வைப்பிலிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.



