News

முட்டைகளை தண்ணீரில் கழுவினால் அதன் மேற்பரப்பில் உள்ள கிருமிகள் முட்டைக்குள் சென்று நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிப்பு

முட்டைகளை கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டைகளைக் கழுவுவதன் ஊடாக முட்டையின் மேற்பரப்பில் உள்ள கிருமிகள் முட்டைக்குள் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் புலின ரணசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வௌியிட்ட புலின ரணசிங்க,

“முட்டை ஓடு என்பது முழுமையாக மூடப்பட்ட ஒன்றல்ல. இது மிக நுண்ணிய துளைகளைக் கொண்டுள்ளது. எனவே, முட்டைகளைக் கழுவும்போது, மேற்பரப்பில் உள்ள அழுக்கு, தூசி மற்றும் விலங்குகளின் மலம் தண்ணீரில் கரைந்து முட்டையின் உள்ளே செல்லும்.

முட்டையின் உள்ளே புரதம் நிறைந்துள்ளது. நுண்ணுயிரிகள் அதில் நுழைந்தால், அவை விரைவாக வளர்ந்து நச்சு நிலைமைகளை ஏற்படுத்தும். எனவே, கழுவிய பின் முட்டைகளை சேமிக்க முடியாது.

இதன் பொருள் முட்டைகளை சமைக்கும்போது கழுவ வேண்டும் என்பதல்ல.

கழுவிய முட்டைகள் சந்தையில் பொதி செய்யப்படுவதில்லை என்று நினைக்கிறேன். முட்டை உற்பத்தி செயல்முறையின் போது அழுக்கு, தூசி மற்றும் மலம் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த நல்ல தரமான முகாமைத்துவ முறைகளைப் பின்பற்றி உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் உள்ளன.

உலகில் சாதாரணமாக முட்டைகளை சுத்தப்படுத்தும் செயற்பாடுகளை இயந்திரங்களின் ஊடாகவே மேற்கொள்வது வழக்கம். அவைகள் கழுவி சுத்தப்படுத்தப்படுவதில்லை” என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button