News
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் இருந்த 566,400 ரூபாய் பெறுமதியான 12 பிரிண்டர் டோனர்கள் திருடப்பட்டன …. அலுவலக உதவியாளர் கைது

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் இருந்து 566,400 ரூபாய் பெறுமதியான 12 பிரிண்டர் டோனர்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த ஆணைக்குழுவின் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு, குருந்துவத்தை காவல் நிலையம் தெரிவித்தது.
கடந்த மாதம் 9ஆம் தேதி, ஆணைக்குழுவின் நிர்வாக சேவை அதிகாரி ஒருவர் இது தொடர்பாக குருந்துவத்தை போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

