News
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புத்தளம் தேர்தல் தொகுதி அமைப்பாளராக ஏ.எச்.எம் ரியாஸ் மீண்டும் நியமனம்.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எச்.எம் ரியாஸ் புத்தளம் தேர்தல் தொகுதிக்கான ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் அமைப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைப்பாளர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கட்சியின் செயலாளர் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்விலே முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எச்.எம் ரியாஸ் புத்தளம் தேர்தல் தொகுதிக்கான ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் அமைப்பாளராக மீண்டும் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

