டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு மீண்டும் எச்சரிக்கை – கடுமையாக வரி உயர்த்த போவதாக நண்பன் மோடிக்கு டிரம்ப் தெரிவிப்பு

டொனால்டு டிரம்ப், இந்தியா ரஷ்யாவிடமிருந்து பெருமளவு எண்ணெய் வாங்குவதற்கு எதிராக மீண்டும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு செலுத்தப்படும் பொருட்களின் மீதான வரியை கணிசமாக உயர்த்துவேன் என அவர் அறிவித்துள்ளார்.
“இந்தியா ரஷ்யாவிடமிருந்து மிகப்பெரிய அளவில் எண்ணெய் வாங்குவது மட்டுமல்லாமல், அவ்வாறு வாங்கப்பட்ட எண்ணெயில் பெரும்பகுதியை உலக சந்தையில் விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டுகிறது,” என டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இன்று பதிவிட்டார்.
“இதன் காரணமாக, இந்தியா அமெரிக்காவுக்கு செலுத்தும் வரியை நான் கணிசமாக உயர்த்துவேன்,” என அவர் குறிப்பிட்டார். இருப்பினும், வரி உயர்வின் அளவு குறித்து அவர் தெளிவாக எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த அறிவிப்பு இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தலாம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


