News
கொழும்பு விஜயராம மாவத்தையில் உள்ள (அரச வீட்டை விட) எனது மெதமுலன வீடு மிகச் சிறந்தது என மகிந்த தெரிவிப்பு

மெதமுலன வீடு கொழும்பில் உள்ள விஜயராம மாவத்தை வீட்டை விட மிகச் சிறந்தது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை தற்போதைய அரசாங்கம் நீக்க முயற்சிக்கும் நிலையில், இதுகுறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் பேசிய மஹிந்த ராஜபக்ஸ, இது தனக்கு பிரச்சினையல்ல என்றும், தனக்கு கிடைத்த சலுகைகள் மக்களிடமிருந்து பெற்றவையே என்றும், அதற்கு அப்பால் எதுவும் முக்கியமல்ல என்றும் வலியுறுத்தினார்.
“மக்களின் நேசம் எங்களுடன் இருக்கும் வரை, அவர்கள் எந்த சலுகைகளை நீக்கினாலும் பரவாயில்லை,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையை அரசாங்கம் அரசியல் பழிவாங்கல் நோக்கில் மேற்கொள்கிறது என்றும் மஹிந்த ராஜபக்ஸ குற்றஞ்சாட்டினார்.

