News

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகரவுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம், வியாழக்கிழமை (07) கையளித்துள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முழு விபரம்:

கௌரவபாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை–பாகம்III, 6வது பிரிவில்,

“உறுப்பினர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் தம்மீது மீது ஒப்படைக்கப்பட்டபகிரங்க நம்பிக்கைக்கிணங்க செயலாற்றுதல் வேண்டும் என்பதுடன் எவையேனும்பொது வளங்களை பயன்படுத்துவது உட்பட அவர்களின் நடவடிக்கை எப்போதும் நேர்மையுடனும் ஒருமைப்பாட்டுடனும் இருத்தல் வேண்டும்”

என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது மீறப்பட்டுள்ளதாலும்;

கௌரவபாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவையின் பகுதி V, 9வது பிரிவின்நடத்தைவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள,

(அ) மனசாட்சிப்படி நடத்தல்;

(இ) மக்களின் நம்பிக்கை மற்றும் மதிப்பை சிறக்கும் வண்ணம் செயற்படல்;

(உ) அவர்கள் பதிலிறுக்கக்கூடியதான நடத்தை மற்றும் கடமைகள் தொடர்பாக பொறுப்புடன் செயற்படுதல்;

ஆகிய நடத்தைவிதிகள் மீறப்பட்டுள்ளன என முதற்தோற்ற நிலையில் உறுதிப்படுத்தப்படுவதாலும்;

அத்துடன், அரசியலமைப்பின் 28வது உறுப்புரைக்கு ஏற்புடையவாறு அடிப்படைக் கடமைகளை புரிதலிலிருந்து பிரதியமைச்சர் என்றவகையில் தவறியுள்ளதாக அவதானிக்கப்படுவதாலும்,

மேலும்,

(1) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சதியின் அடித்தளமாகக் கருதப்படும் 2018 அரசியலமைப்பு விரோத சதியின் போது அதாவது 2018 நவம்பர் மாதத்தில் 17வது பாதுகாப்புப் படைப் பிரிவு (கிழக்கு) கட்டளைத் தளபதியாக [17th Commander of the Security Force (East)] கௌரவ அருண ஜயசேகர அவர்கள் நியமிக்கப்பட்டதால், அதன் பிரகாரம் அவர் பாதுகாப்புப் படைப் பிரிவின் (கிழக்கு) கட்டளைத் தளபதியாக பதவியைப் பொறுப்பேற்றதாலும்;

(2) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் முக்கியமான தகவல்கள் பலவற்றை வெளிப்படுத்தி சந்தேகநபர்களை கைது செய்யும் வவுணதீவு பொலிஸ் காவலரணில் இலங்கை பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரின் கொலை நடந்த சந்தர்ப்பத்தில் கௌரவ அருண ஜயசேகர அவர்கள் பாதுகாப்புப் படைப் பிரிவின் (கிழக்கு) கட்டளைத்தளபதியாக பணியாற்றியதாலும்;

(3) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தீர்மானமிக்க நிகழ்வான சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தின் சம்பவம் நடந்த சந்தர்ப்பத்தில் கௌரவ அருண ஜயசேகர அவர்கள் பாதுகாப்புப் படைப் பிரிவின் (கிழக்கு) கட்டளைத் தளபதியாக பணியாற்றியதாலும்;

(4) உரிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திலிருந்து இலங்கை இராணுவத்தின் சிலருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடையைப் பெற்றுள்ளதாலும்;

(5) கட்டுவாப்பிட்டி தேவாலயத்தின் குண்டுதாரி ஹஸ்துன் என்பவரின் மனைவி என அழைக்கப்படும் சாரா ஜஸ்மின் மறுபெயர் புலஸ்தினி மஹேந்திரன் சாய்ந்தமருதுவில் குறித்த இடத்தில் இருந்ததாகவும், குண்டு வெடித்த பின்னரும் அவர் உயிருடன் இருந்ததாகவும் சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியா தெரிவித்துள்ளதால், குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் அவர் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட சம்பவம் சந்தேகத்துக்குரியது என்று தெரிவித்துள்ளதாலும்;

(6) உரிய சாய்ந்தமருது சம்பவம் தொடர்பில் இப்போது விசாரணையைத் தொடங்கி, இராணுவத்தின் அப்போதைய நடவடிக்கையில் பங்கேற்ற அப்போதைய கௌரவ அருண ஜயசேகர அவர்களின் கீழ் இருந்த அலுவலர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளுவது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாலும்;

(7) இந்த சம்பவம் தொடர்பில் கௌரவ அருண ஜயசேகர அவர்களே பாராளுமன்றத்தில் தெரிவித்தபடி அவரிடமிருந்தும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாலும்;

(8) வவுணதீவு மற்றும் சாய்ந்தமருது சம்பவங்கள் இரண்டிற்கும் தொடர்புடைய விசாரணைகளில் சாட்சியங்கள்/வாக்குமூலங்களை இராணுவ ஆளணியிடமிருந்து மேலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெற்றுக்கொண்டிருப்பதாலும்;

(9) கௌரவ அருண ஜயசேகர அவர்கள் தேர்தலுக்கு முன்னரான காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற முப்படை கூட்டமைப்பின் செயற்பாட்டு உறுப்பினராகப் பணியாற்றி, 2410/08 ஆம் இலக்க2024.11.17 ஆந் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையின் அறிவித்தலின்படி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் தேசிய பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு, 2412/23 ஆம் இலக்க2024.11.28 ஆந் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையின் அறிவித்தலின்படி பாதுகாப்பு பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதாலும்மற்றும் சில சந்தர்ப்பங்களில் பதில் கடமையாற்றும் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றுவதனாலும்;

(10) உரிய சம்பவங்கள் குறித்து சாட்சியங்களை அளிக்கும் இராணுவ அலுவலர்கள் சாட்சியங்களை அளிக்கும்போது, அப்போதைய பிராந்திய பொறுப்பு பிரதானியாக இருந்த கௌரவ அருண ஜயசேகர அவர்கள் தற்போது இராணுவத்துக்குப் பொறுப்பான அமைச்சின் பாதுகாப்பு பிரதியமைச்சராகப் பணியாற்றிக் கொண்டிருப்பதால், அலுவலர்கள் சாட்சியங்களை அளிக்கும்போது அவர்களின் பதவி உயர்வுகள்/இடமாற்றங்கள் மற்றும் பிற செயற்பாடுகளில் தாக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் சாட்சியங்களை அளிப்பதில் தயக்கம் காட்ட வாய்ப்புள்ளதாலும்

(11) அப்போதைய பாதுகாப்புப் படைப் பிரிவு (கிழக்கு) கட்டளைத் தளபதியாக இருந்த கௌரவ அருண ஜயசேகர அவர்களின் கீழ் இருந்த அலுவலர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதால், அவர்,குறித்த அலுவலர்கள் கடமைபுரிந்த இராணுவத்துக்குப் பொறுப்பான அமைச்சின் பாதுகாப்பு பிரதியமைச்சராகப் பணியாற்றுவதால் விசாரணை குறித்து சந்தேகங்கள் எழுவதற்கு வாய்ப்புள்ளதாலும்அக்கறைமுரண்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாலும்;

(12) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த அரசாங்கத்தில் கௌரவ அருண ஜயசேகர அவர்கள் பிரதியமைச்சராக பொறுப்பான பதவியை வகித்தும் இதுவரை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க முடியாது போயுள்ளதாலும்;

(13) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விசாரணைகள் தொடர்பில் கௌரவ அருண ஜயசேகர அவர்கள் இராணுவத்தில் பதவி வகித்த காலப்பகுதியில் முறையான நடவடிக்கைகள் எடுக்காத பின்னணியில், தற்போதைய அரசாங்கத்தின் பிரதியமைச்சராகப் பணியாற்றுவதால், குறித்த விசாரணைகளில் ஏதேனும் அழுத்தம் ஏற்படக்கூடும் என கத்தோலிக்க திருச்சபை கருதுவதாலும், குறித்த விசாரணைகளின் நம்பகத்தன்மை தொடர்பில் பிரச்சினைகள் உள்ளதாக கர்தினால் அவர்களின் பேச்சாளர் வணக்கத்துக்குரிய சிரில் காமினி அருட்தந்தை தெரிவித்துள்ளதாலும்;

(14) உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விசாரணை நடத்துவது சவாலானதும், அரசாங்கத்தால் அரசாங்கத்தையே விசாரணைக்கு உட்படுத்துவது கடினமாகியுள்ளதாகவும், அரசாங்கத்தை அரசாங்கமே விசாரணைக்கு உட்படுத்த வேண்டியுள்ளதாகவும்,சனாதிபதி அவர்கள் கர்த்தினால் அவர்களின் ஆன்மீக வாழ்க்கையின் 50 ஆண்டுகள் நிறைவு முன்னிட்டு நடைபெற்ற விழாவில் தெரிவித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விசாரணைகளைத் தடுக்க இன்னும் அரச இயந்திரத்தின் ஊடாக சதி நடைபெறுவதாக கருதுவதாலும்;

(15) கௌரவ பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர அவர்கள் 2025.07.09 அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்ததன்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விசாரணைகளில் வெளிப்படுவதுபோல் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக புலனாய்வுப் பிரிவின் சிறு குழுவும் அரசாங்க அலுவலர்களின் சிறு குழுவும் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிப்பதன் மூலம் அதனுடன் தொடர்புடைய புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள் பற்றி அவருக்கு விழிப்புணர்வு அல்லது புரிதல் இருக்கக்கூடும் என்று கருதுவதாலும்;

கௌரவ அருண ஜயசேகர அவர்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் பதவி வகிக்கும் அரசாங்கத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விசாரணைகள் நடத்தப்படுவதால், அழுத்தங்கள் மற்றும் அக்கறைமுரண்பாடு ஏற்படுவதுடன், அதன்மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விசாரணைகள் பாரபட்சமின்றி மற்றும் சுதந்திரமாக நடைபெறுமா என்பதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பாதிக்கப்பட்டவர்களின், கத்தோலிக்க திருச்சபையின், பொதுமக்களின் நம்பிக்கை சிதைந்துள்ளதால், கௌரவ அருண ஜயசேகர அவர்கள் பாதுகாப்பு பிரதியமைச்சர் பதவி வகிக்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்ககுதல்விசாரணைகள் நடத்தப்படுவதால் இந்தஉயரிய சபையின் நம்பிக்கை இல்லாது போயுள்ளதால் அவர்,குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று இந்த உயரிய சபை தீர்மானம் நிறைவேற்றுமாக.

Recent Articles

Back to top button