ஏறாவூரில் திறக்கப்பட்ட வீடியோ கேம் சென்டர், மாணவர்கள் நலன் கருதி உடனடியாக இன்றைய தினமே மூடுமாறு உத்தரவிடப்பட்டது.

ஏறாவூர் றகுமானியா பாடசாலையை அண்மித்து Joystick Junction எனும் பெயரில் திறக்கப்பட்ட வீடியோ கேம் சென்டர் மாணவர்கள் நலன் கருதி உடனடியாக இன்றைய தினமே மூடுமாறு உத்தரவிடப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பாக தவிசாளருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் நகர முதல்வர் எம். எஸ். நழீம் அங்கு கூடியிருந்த சிறுவர்களை அவர்களது வீடுகளுக்குச் செல்லுமாறு பணித்ததோடு இந்த கேம் சென்டரை இன்றுடன் உடனடியாக இழுத்து மூடுமாறு உரிமையாளருக்கு உத்தரவிட்டார்.
ஏறாவூரின் கல்வி மேம்பாடு , எதிர்கால சமூகத்தின் வளமான எதிர்காலம் என்ற அடிப்படையில் தவிசாளரினால் பல்வேறு முன்னெடுப்புகள் இடம்பெற்று வரும் நிலையில் மாணவர்களின் கல்விக்கு குந்தகம் விளைவிக்கும் அதே வேளை, பரீட்சை காலம் என்ற நிலையிலும் குறித்த நிலையத்தில் அதிக மாணவர்கள் அங்கு குழுமி இருந்த நிலையிலேயே குறித்த உத்தரவு தவிசாளரினால் பிறப்பிக்கப்பட்து-
இந்த கேம் சென்டரைத் திறப்பதற்காக நகர சபையில் ” போட்டோ கொப்பி எடுத்தல் மற்றும் நெட் கபே” எனும் பெயரில் 1500/- கட்டணம் செலுத்தப் பட்டிருந்தது டன் நகர சபையினால் அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை.

