News
நூறு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருள் மற்றும் பணம் வைத்திருந்த இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது

நூறு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் இரண்டு நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 5 கிலோகிராம் 154 கிராம் குஷ் போதைப்பொருள்,கையடக்கதொலைபேசி மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் பணம் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.

