News
டொனால்ட் ட்ரம்ப்பை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட ஆலோசனை வழங்க நான் இந்தியா போகிறேன் என பெஞ்சமின் நெதென்யாஹு அறிவிப்பு

இந்தியா – அமெரிக்கா இடையிலான பிரச்சனை குறித்து ஆலோசனை வழங்க இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருகைதர இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
செய்தியாளர்களுடன் நெதன்யாகு பேசுகையில்,
இந்தியப் பிரதமர் மோடியும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் எனது நெருங்கிய மற்றும் உற்ற நண்பர்கள். ட்ரம்ப்பை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட ஆலோசனையும் வழங்குவேன் என்று தெரிவித்ததுடன், கூடிய விரைவில் இந்தியாவுக்கு வருகைதர இருப்பதாகவும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தொடர்ந்து பேசுகையில், இந்தியா – அமெரிக்கா உறவு, மிகவும் வலுவானது மற்றும் அதனைக் கருத்தில்கொண்டு இரு நாடுகளும் பிரச்னையைத் தீர்க்க வேண்டும்.அதுதான் இரு நாடுகளுக்கும் நல்லது. இஸ்ரேலுக்கும் நல்லது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

