News
விடுதலைப் புலிகளால் பண்டாரடுவ கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 30 பொதுமக்கள் – 35 ஆண்டுகள் நிறைவு அனுஸ்டிக்கப்பட்டது

பாறுக் ஷிஹான்
1990 ஆகஸ்ட் 07 அன்று அம்பாறை மாவட்டத்தின் பண்டாரடுவ கிராமத்தில் 30 பொதுமக்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட 35 வது ஆண்டு நினைவு அனுஸ்டிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை( 08) நிகினி முழு நிலவு நாள் இரவு அவ்வனர்த்தத்தில் இறந்தவரின் உறவினர்கள் அப்பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு விளக்குகளை ஏற்றி நினைவு கூர்ந்தனர்.
பின்ன் பண்டாரடுவ ஸ்ரீ விமலராம கோயிலில் பிரதம விகாராதிபதி வண. வாலகம்புர புண்யரதன தேரரின் வழிகாட்டுதலின் கீழ் ராஜாகம அனுருத்த தேரர் ஒரு கவிதை பிரசங்கம் நிகழ்த்தினார்.
இதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)
Journalist-මාධ්යවේදී

