கிண்ணியா நகர வீதிகளில் கட்டாக்காலியாக சுற்றித்திரிந்த மாடுகள் பொலிஸ் நிலைய வளாகத்தில் கட்டி வைக்கபட்டன.

ஹஸ்பர் ஏ.எச்_
கிண்ணியா நகர சபை எல்லைக்குள் போக்குவரத்துக்கு இடையூறாகவும் விபத்துகளுக்கு காரணமாகவும் வீதிகளில் நடமாடும் மாடுகள் பிடிக்கப்படும் என பலமுறை அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்தன.
அதன் அடிப்படையில் (09) HA எனும் குறிகள் உள்ள மூன்று மாடுகள் பிடிக்கப்பட்டு பொலீஸ் நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளன.
அம் மாடுகளின் உரிமையாளர் உடனடியாக நகர சபை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
கிண்ணியா பிரதான வீதி உட்பட பல வீதிகளில் கட்டாக்காளி மாடுகளின் இரவு நேர மற்றும் பகல் நேரங்களில் நடமாடுவதனால் பல விபத்து சம்பவங்கள் போக்குவரத்து அசௌகரியம் என ஏற்படுவதாக நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தியின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து இவ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நகர சபை தவிசாளர் தெரிவித்தார்.
—
Hasfar A Haleem BSW (Hons)
Journalist

