News
பாகிஸ்தானில் முதலாவது Mpox நோயாளர் பதிவு
உலக பொதுச் சுகாதார அவசரகால நிலையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் பாகிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ளார்.
34 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள சான்பிரான்சிஸ்கோவிலும் குரங்கம்மை நோய் நிலைமை கண்டறியப்பட்டுள்ளது.
கழிவு நீரின் மாதிரியில் இந்த நோய் கிருமி கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை (15) சுவீடனில் குரங்கம்மை நோயுடன் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய் பரவல் காரணமாகக் கொங்கோ குடியரசில் மாத்திரம் 450 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.