நான் ரெடி தயாசிறி ரெடியா? வேலுகுமார் MP
பார் பேர்மிட் எனக்கிருந்தால், நான் பதவி விலக தயார். தயாசிரியால் முடியுமா நிரூபிக்க?
குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எவ்வித அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டை என் மீது வைத்துள்ளார்.
அன்று நாடு நன்றாக இருந்த போது, நல்லாட்சி சரிவராது என்று கோட்டாவை ஜனாதிபதி கதிரையில் அமர்த்திய பங்காளி இவர். இன்று வங்குரோத்தான நாட்டை மீண்டும் கட்டி எழுப்பி, வளர்ச்சி பாதையில் ரணில் வழிநடத்தி வருகின்றார். மீண்டும் வந்து இவர் சரிவராது என்று இன்னொரு கோட்டாவை ஜனாதிபதியாக்க தயாசிறி துள்ளி குதிக்கிறார். ஆனால் நாட்டிற்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஒரே தலைவர் ரணில் என்பதே உண்மையாகும். அதற்கு அமைய துணிச்சலாக முன்வந்து அவரின் வெற்றிக்கு எனது ஒத்துழைப்பை வழங்கியுள்ளேன்.
தயாசிறி சொல்வது போல் இலங்கையில் எந்த ஒரு மூலையிலாவது எனக்கு பார் பேர்மிட் இருக்குமாக இருந்தால் எனது பாராளுமன்ற உறுப்புரிமையை விட்டு விலக நான் தயாராக இருக்கின்றேன். அதனை தயாசிறி நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் அவர் முன்வைத்த கூற்றை ஏற்று முதுகெலும்பு உள்ளவராக பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவாரா?
நான் மக்கள் முன் இந்த சவாலை முன்வைக்கின்றேன். ஆனால் எனது பெயரில் நாட்டுக்கு கல்வி வழங்கும் பல நிலையங்கள் இருக்கின்றதென்பதையும் பச்சோந்தியான தயாசிரிக்கு சொல்லி வைக்கின்றேன். சேறு பூசுவதால் எனது பயணத்தை தடுத்துவிட முடியாது. எனது தெரிவே இந்நாட்டு மக்களின் இம்முறை ஜனாதிபதி தேர்தலின் தெரிவாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன்.