News
ஒப்பந்தங்கள் தொடர்பில் விளக்கமளிக்க (மு கா தவிர) முஸ்லிம் கட்சிகள் தயார் – எனஅறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலை ஒட்டி ஜனாதிபதி வேட்பாளர்களுடன் தாம் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறைகள் பற்றி மக்கள் மன்றில் விளக்கமளிக்குமாறு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்,
தேசிய காங்கிரஸ் தலைவர்,
நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் பிரதித் தவிசாளர்,
ஆகியோருக்கு நாம் அழைப்பு விடுத்திருந்த நிலையில்,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமை தவிர, மற்ற 3 கட்சிகளும் ஒரே மேடையில் பகிரங்க விளக்கமளிக்க ஒப்புக்கொண்டு உறுதியளித்துள்ளனர்.
நிகழ்வு நடைபெறும் திகதி, இடம் பற்றி ஓரிரு நாட்களில் பொதுமக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கப்படும். – இன்ஷா அல்லாஹ்.
அன்புடன்,
ரஸ்மின் MISc
0771081996