ஈஸ்டர் குண்டுதாரிகளின் தந்தை இப்ராஹிம் ஜே வி பி கட்சியை சேர்ந்தவர் என்பதற்காக ஈஸ்டர் தாக்குதலை ஜே வி பி பொறுப்பேற்குமா ?

ஈஸ்டர் குண்டுதாரிகளின் தந்தை இப்ராஹிம் ஜே வி பி கட்சியை சேர்ந்தவர் என்பதற்காக ஈஸ்டர் தாக்குதலை ஜே வி பி பொறுப்பேற்குமா என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யு கே சுமித் கேள்வி எழுப்பினார்.
ஊடகவியளாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்,
நாமும் போதைபோருள் அதனுடன் தொடர்புடைய பாதாள செயற்பாடுகளுக்கு எதிரானவர்கள்.போதைப்பொருள்களால் நாளை எமது பிள்ளைகளும் பாதிக்கப்படலாம் அது முழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும்.
எமது கட்சியை சேர்ந்த ஒருவர் சந்தேகத்திற்கிடமான இராசயன பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளமையை அரசு சர்ச்சையாக்கியுள்ளது. அவர் தற்போது ஒரு சந்தேக நபர் இரசாயன பகுப்பாய்வின் பின்னர் கைப்பற்றப்பட்டுள்ள போதைபொருளா அல்லது வேறு இராசாயண பொருளா என்பது தெரியவரும்.குறித்த சந்தேக நபர் போதைப்பொருள் கொண்டு வந்துள்ளமை உறுதியானால் அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்.
அதேநேரம் சந்தேகநபர் எமது கட்சியை சேர்ந்தவர் என்பதற்காக எம்மீது யாரும் விரல் நீட்டக் கூடாது. ஈஸ்டர் குண்டுதாரிகளின் தந்தை இப்ராஹிம் ஜே வி பி கட்சியை சேர்ந்தவர் என்பதற்காக ஈஸ்டர் தாக்குதலை ஜே வி பி பொறுப்பேற்குமா ? அரசு போட்டோ காட்டி படம் காட்டுவதை விட்டு விட்டு குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் என கூறினார்.

