News
பழைய நண்பர் வாசுதேவ நாணயக்காரவை நலம் விசாரிக்க சென்றேன் – அவர் ஒரு அற்புதமான மனிதர் ; மகிந்த ராஜபக்ஸ

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது ஓய்வு பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் நலம் விசாரிக்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
” பழைய போர் தோழரான வாசுதேவ நாணயக்காரவை சந்தித்து அவரது நலம் விசாரிக்க அவரது வீட்டிற்கு சென்றேன். வாசுதேவ நாணயக்காரவும் நானும் பல ஆண்டுகளாக அரசியலில் ஒன்றாக இருக்கிறோம். நாங்கள் இருவரும் 1970 இல் அரசியலில் நுழைந்தோம். நட்பு மிகவும் பழமையானது. அது மிகவும் சிக்கலானது. வாசுதேவ ஒரு அற்புதமான தோழர். உணர்ச்சி மிக்கவர். ஒரு நல்ல நண்பர்,” என்று மஹிந்த ராஜபக்ஷ வாசுதேவ நாணயக்காரவை சந்தித்த பிறகு சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்

