News
நான்கு வரியில் கட்டாருக்கு அனுதாபம் தெரிவித்த சியோனிஸ்ட் ஆதரவு NPP அரசு !

கட்டாரில் அண்மையில் நடந்த தாக்குதல்கள் குறித்து இலங்கை கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை வெளிநாட்டு அமைச்சு வெளியிட்டுள்ள நான்கு வரி ஊடக அறிக்கையில் இஸ்ரேலின் அத்துமீறலை கண்டிக்க மறந்த இலங்கை அரசு இஸ்ரேலின் பெயரை கூட குறிப்பிடவில்லை என்பது மிக கவலையான விடயமாகும் .
எதிர்க்கட்சியில் இருந்த போது பலஸ்தீன் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த தோழர்கள் இப்படியான ஒரு நான்கு வரி அறிக்கை வெளியிட்டமைக்கு அறிக்கை வெளியிடாமலே இருந்திருக்கலாம்.
ஹிதாயத் சத்தார்
முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்.

