News

பெரிய தியாகம் செய்து உள்ளேன்… என் பிள்ளைகளை ஆஸ்திரேலியாவில் விட்டுவிட்டு வந்துள்ளேன் – தேவைப்பட்டால் அவுஸ்திரேலிய குடியுரிமையையும் இழக்கத் தயார் – திலகரட்ன டில்ஷான்

சஜித் பிரேமதாசவின் வேலைத்திட்டம் மற்றும் தொலைநோக்குப் பார்வையை மிகவும் உன்னிப்பாக ஆராய்ந்த பின்னர் அவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததாக முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் திலகரட்ன டில்ஷான் கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி இன்று (20) ஏற்பாடு செய்திருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவரைச் சுற்றி நல்ல அணி இருப்பதாகவும், ஒரு நல்ல தலைவருக்கு நல்ல அணி தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

தாம் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் எனவும், நாடாளுமன்றம் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேவை ஏற்பட்டால் தனது குடியுரிமையை விலக்கிக் கொள்ளத் தயார் எனவும், விளையாட்டு அமைச்சர் பதவியையோ அல்லது எதையோ எதிர்பார்த்து எதிர்க்கட்சியில் இணையவில்லை எனவும் திலகரட்ன டில்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.

“பெரிய தியாகம் செய்து விட்டேன்.. என் பிள்ளைகள் அனைவரும் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்கள்.. கட்சி வேறுபாடின்றி நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று என் குழந்தைகளை விட்டுவிட்டுத்தான் வந்தேன்..” எனத் தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button