News
மருமகனின் தா* க்குதலில் மாமியார் உயிரிழப்பு – மனைவியும், மகளும் காயம்
தன் மாமியாரை கொன்றதுடன் மனைவி மற்றும் மகளையும் காயப்படுத்திய நபர் ஒருவர் கலபிடமடை லெவங்கம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பணத் தகராறு தொடர்பாக மாமியார் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதால் குறிப்பிட்ட நபர் கல்லால் மாமியாரின் தலையில் தாக்கியுள்ளார்.
தலையில் கல்லால் தாக்கப்பட்டதில் மாமியார் (55) கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மனைவியும் மகளும் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.