News

காதலர்களை மிரட்டி லஞ்சம் வாங்கிய இரண்டு போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கடுவெல காவற்துறையில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் 10,000 ரூபா இலஞ்சம் பெற முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக நுகேகொட பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இரு போலிஸ் அதிகாரிகளும் 14ஆம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை மோட்டார் சைக்கிள் ரோந்து கண்காணிப்பில் இருந்தவர்கள்.

இந்நிலையில் கடுவெல பொலிஸ் பிரிவிற்கு வெளியே உள்ள முல்லேரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திரிகா குமாரதுங்க மாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இளைஞனும் , யுவதி ஒருவரும் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என 119 இலக்கத்திற்கு தகவல் ஒன்று வந்துள்ளது.

இதனை அடுத்து குறிப்பிட்ட காரை பரிசோதனை செய்யுமாறு மோட்டார் சைக்கிள் ரோந்து கண்காணிப்பில் இருந்த இரு போலீசாருக்கும் கட்டளை வந்துள்ளது… அவர்கள் அங்கு வந்து குறிப்பிட்ட காரை பரிசோதனை செய்தபோது உள்ளே இருந்தவர்களை பயங்காட்டி அவர்களிடம் 10,000 ரூபா இலஞ்சம் வாங்க முயற்சித்துள்ளனர் .

இந்தவிடம் விசாரணையில் வெளியில்வரவே குறிப்பிட்ட இரு போலிஸ் அதிகாரிகளும் தற்போது பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளனர்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button