முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன். தமிழர்களின் கலாசாரத்தைப் பாதுகாத்து, மொழி உரிமையையும் வழங்குவேன் ஆனால் ஒருபோதும் வடக்கு – கிழக்கை மீளிணைத்துக் காணி மற்றும் காவல்துறை அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டேன் ; நாமல்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீளிணைத்துக் காணி மற்றும் காவல்துறை அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டேன் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின்(SLPP) முதலாவது கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (21) அநுராதபுரம் நகரில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “சிறிலங்கா பொதுஜன பெரமுன இந்த நாட்டின் அரசியல் வரைபடத்தை மாற்றியமைத்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேசிய உற்பத்திகளை முன்னிலைப்படுத்திய பொருளாதார திட்டங்களை முன்னெடுத்து குறுகிய காலத்தில் நாட்டை பல்வேறு துறைகளில் முன்னேற்றினார்.
2015 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்த நாட்டை கையளித்தோம். 2019 ஆம் ஆண்டு பொருளாதார மட்டத்தில் பாதிக்கப்பட்டிருந்த நாட்டையே கோட்டாபய ராஜபக்ச பொறுப்பேற்றார்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் கொவிட் பெருந்தொற்றுத் தாக்கத்துக்கும் முகங்கொடுக்க நேரிட்டது. பொருளாதாரமா அல்லது மக்களின் உயிரா என்ற தீர்மானமிக்க கேள்வி எழுந்த போது மக்களின் உயிரையே பாதுகாத்தோம்.
பொருளாதாரப் பாதிப்பை முன்னிலைப்படுத்தி ஒரு தரப்பினர் எமது அரசை வீழ்த்தினார்கள். அரசு வீழ்ச்சியடைந்தாலும் நாட்டை வீழ்ச்சியடைய செய்யவில்லை. இலங்கை ஒற்றையாட்சி நாடு.
https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&us_privacy=1—&gpp_sid=-1&client=ca-pub-3603232726550318&output=html&h=280&adk=786548862&adf=3079112768&w=555&abgtt=5&fwrn=4&fwrnh=100&lmt=1724315942&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=4879677282&ad_type=text_image&format=555×280&url=https%3A%2F%2Fibctamil.com%2Farticle%2Fsrilanka-preidencial-election-namal-press-meet-1724297034&fwr=0&pra=3&rh=139&rw=555&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMC4xLjAiLCJ4ODYiLCIiLCIxMDkuMC41NDE0LjEyMCIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJOb3RfQSBCcmFuZCIsIjk5LjAuMC4wIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTA5LjAuNTQxNC4xMjAiXSxbIkNocm9taXVtIiwiMTA5LjAuNTQxNC4xMjAiXV0sMF0.&dt=1724315941323&bpp=3&bdt=30323&idt=-M&shv=r20240819&mjsv=m202408140102&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Ddf348ee30e951ff3%3AT%3D1711710181%3ART%3D1724315932%3AS%3DALNI_MbvYhV4DRZeQ3BnVP_gG2AZblhumw&gpic=UID%3D00000d7499b7bcb6%3AT%3D1711710181%3ART%3D1724315932%3AS%3DALNI_MbTRAvqozoBm2UoJwE5hkhvUGAMTQ&eo_id_str=ID%3Dabcddf70e6f1b020%3AT%3D1711710181%3ART%3D1724315932%3AS%3DAA-AfjbDupXCUcKhScZI75fqOYvT&prev_fmts=0x0%2C336x0%2C555x280&nras=3&correlator=6279759623612&frm=20&pv=1&u_tz=330&u_his=1&u_h=768&u_w=1024&u_ah=728&u_aw=1024&u_cd=24&u_sd=1&dmc=2&adx=65&ady=2681&biw=1007&bih=625&scr_x=0&scr_y=770&eid=44759876%2C44759927%2C44759842%2C44795921%2C95331687%2C95334830%2C95338227%2C31086338%2C95340253%2C95340255&oid=2&pvsid=1376155231075188&tmod=1064565824&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fwww.google.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1024%2C0%2C1024%2C728%2C1024%2C625&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&ifi=15&uci=a!f&btvi=3&fsb=1&dtd=1329
நாட்டின் ஒற்றையாட்சியைப் பாதுகாக்கவே படை வீரர்கள் போரிட்டார்கள். நாங்கள் அரசியலில் இருக்கும் வரை இந்த நாட்டில் எல்லைக் கிராமங்கள் தோற்றம் பெறுவதற்கு இடமளிக்கப்போவதில்லை.
காணி அதிகாரம்
இந்தப் பௌத்த நாட்டில் அனைத்து மதங்களுக்கும் முன்னுரிமை மற்றும் கௌரவமளிக்கத் தயார். அதனைச் செய்வோம். அதேபோல் மாகாண சபைக்குள் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை ஒருபோதும் வழங்கமாட்டோம்.
தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை முடியாது என்பேன். தமிழர்களின் கலாசாரத்தைப் பாதுகாப்பேன். மொழி உரிமையையும் வழங்குவோம்.
ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளிணைத்து காணி மற்றும் காவல்துறை அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டோம்” என தெரிவித்தார்.