பொதுமக்களின் வாழ்க்கையோ, சுற்றுச்சூழலோ பாதிக்கப்படாது
⏩ அருவாக்காலு மேட்டில் குப்பைகளை இறக்குதல், மீள குப்பைகளை ஏற்றுதல் மற்றும் குப்பை சேமித்து வைப்பதற்குமான அடிப்படை பரீட்சார்த்த முயற்சிகள் ஆரம்பம்…
⏩ குப்பைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம் அதிகபட்சமாக பயன்படுத்தப்படுகிறது…
⏩ அருவாக்காலு குப்பை திட்டத்தால் பொதுமக்களின் வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை…
இன்று (25ஆம் திகதி) குப்பைகளை இறக்குவதற்கும் குப்பைகளை மீள ஏற்றுவதற்கும் மற்றும் குப்பைகளை சேமித்து வைப்பதற்குமான அடிப்படை பரீட்சார்த்த முயற்சிகள் அருவாக்காலு குப்பை மேட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திட்டப்பணிப்பாளர் ஆர்.எம்.ஜி.எஸ்.பண்டார தெரிவித்தார்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நவீன தொழில்நுட்பம் அதிகபட்சமாக பயன்படுத்தப்படும் என்று பணிப்பாளர் வலியுறுத்தினார்.
எனவே, அருவாக்காலு குப்பைத் திட்டத்தால் பொதுமக்களின் வாழ்க்கையோ, சுற்றுச்சூழலோ பாதிக்கப்படாது என்று தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் “கொழும்பு பெருநகர திண்மக்கழிவு முகாமைத்துவத் திட்டம்” 2017 இல் ஆரம்பிக்கப்பட்டது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நகர திண்மக்கழிவு பிரச்சினைக்கு தீர்வு காண, சுகாதாரமான குப்பை கிடங்கு வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த குப்பை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி, இத்திட்டத்தின் கீழ், கொழும்பு நகரில் நாளாந்தம் சேகரிக்கப்படும் சுமார் 1200 மெற்றிக் தொன் குப்பைகள் களனி, வனவாசலயில் இருந்து சுமார் 170 கிலோமீற்றர் தொலைவிலுள்ள புத்தளம், அருவக்காலு குப்பைத் தளத்திற்கு புகையிரதம் கொண்டு செல்லப்படவுள்ளது.
இங்கு அருவக்காலு குப்பை மேடு மற்றும் களனி – வனவாசல கழிவு பரிமாற்ற நிலையம் இங்கு நிர்மாணிக்கப்படும்.
இந்த கழிவுகளை அருவாக்காலு குப்பை மையத்தில் இறக்கிய பின், அருகில் உள்ள சுகாதார குப்பை கிடங்கில் அகற்றப்படும்.
ஊடகச் செயலாளருக்கு பதிலாக விஜயானந்த ஹேரத்