கண்டி மல்வத்தை பீட மகாநாயக்க தேரரின் உறவினர் என தெரிவித்து திகன பிரதேசத்தில் அதிகாரிகளை மிரட்டி, பயமுறுத்தி வந்த நபர் கைது

மால்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரரின் உறவினர் போல் நடித்த நபர் கைது.
மால்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர், திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரின் உறவினர் போல் நடித்து வேலைகளை செய்ய முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளின்படி, சந்தேகநபர் காவல்துறையுடனான தொலைபேசி அழைப்பின்போது திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் போலவும் பாசாங்கு செய்துள்ளார்.
சந்தேகநபர், வண. சுமங்கள தேரரின் உறவினர் என்று கூறி அதிகாரிகளை பயமுறுத்தி, குண்டசாலை பிரதேச சபையில் தேசிய அடையாள அட்டை (NIC) ஒன்றைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திகனவில் வசிக்கும் 40 வயதுடைய மேடை நடிகரான அந்தச் சந்தேகநபரை கண்டி தலைமையக அதிகாரிகள் கைது செய்தனர்.
மால்வத்தை பீடத்தின் அதிகாரியொருவர் காவல்துறைக்கு அறிவித்ததையடுத்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



