பிரதான வீதியின் ஆறு அடி அளவு கொண்ட சொந்த காணியை நகர சபைக்காக விட்டுக் கொடுத்த ஆசிரியர்

ஹஸ்பர் ஏ.எச்
——————————
கிண்ணியா_05 பெருந்தெரு Panacea தனியார் வைத்தியசாலை சந்தியில் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக தங்களுடைய சுற்று மதிலை உடைத்து அகலமாக்கி தர முடியுமா? என கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி அவர்கள் கிண்ணியா வலய  கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரியாக கடமை புரியும் ஜலால்தீன் நாம்தீன் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது 
அவரோ எந்த மறுப்பும் தெரிவிக்காது மனமுவந்து சுமார் 6 அடிக் காணியை சுற்று வளைவிற்காக விட்டு புதிய மதிலை அமைத்துள்ளார்.
அவர்களுக்கு கிண்ணியா மக்கள் சார்பாகவும் கிண்ணியா நகரசபை சார்பாகவும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தற்காலத்தில் இவ்வாறான தாராள மனம் கொண்டவர்கள் அரிது.
அரச காணியை சட்டவிரோதமான அபகரிப்பே அதிகமாக காணப்படும் தருணத்தில் குறித்த ஆசிரியரின் தாராள மனதை பலரும் பாராட்டி வருகின்றனர்

  
 
 


